0

திருவாளத்தான்

ஒரு நாட்டில் திருவாளத்தான் திருவாளத்தான்னு ஒரு பையன் இருந்தான். அவனுடைய அப்பா அந்த நாட்டு ராசாவோட படையில சிப்பாயா வேலை செஞசிட்டு இருந்தாங்க.  அந்த ராசா எப்பப்பார்த்தாலும் போர் போர்னு சண்டை பிடிச்சிட்டே இருப்பாங்க. இந்த பக்க நாட்டு மன்னனோட சண்டை, அந்த பக்க நாட்டு மன்னனோட சண்டைன்னு எப்பப்பாரு சண்டையிலயே இருப்பாரு. அதனால திருவாளத்தானோட அம்மாதான் எப்பவும் அவங்கூட இருப்பாங்க. அவங்க அப்பா போருக்குப் போனதால, ராசாவும் நாட்டில இல்லாததினால அந்த நாட்டில பொம்பளைங்கள்ளலாம் வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க.

அந்த நாட்டு ராசா பேராசை பிடிச்சவரு. நாட்டில எல்லாரும் படையில சேரனும்னு சட்டம் போட்டதில எல்லா வாத்தியாருங்களும் படையில போயி சேர்ந்திட்டாங்க. பள்ளிக்கூடமெல்லாம் படைக்கூடமா மாறிட்டது. திருவாளத்தான் மாதிரி பி்ள்ளைகள் எல்லாம் பள்ளிக்கூடம் போக முடியல.

 

அதனால வீட்டிலதான் இருந்தாங்க. இது அம்மாங்களுக்கெல்லாம் பெரிய தொல்லையா இருந்தது. திருவாளத்தானும் அவன் அம்மாவும் மட்டும் தான் வீட்டில இருந்ததினால அவங்க அம்மா அவனை வீட்டில வைச்சு பூட்டிட்டுத்தான் வயல் வேலைக்குப் போவாங்க.

 

 

தொடரும்……

0

Don’t go out, it’s already dark – by A.Priyangah

Being in their adolescence, everyone fights for one thing or another. They think laws and restrictions are mean.

And being a girl, I felt they were too much. I used to think my parents hated me. Everything I wanted to do was scrutinized and most of the times rejected.little

Whenever my brother would ask if he can go out, he was granted permission regardless of the time.

As for me, the answer was like, “Don’t go out, it’s already dark” or “Don’t go outside alone.” Entry outside the house after 8 O’clock were almost a strict no.

This wasn’t the end of it. My mom constantly tried to mould me, “Don’t wear leggings and jeans”, “Don’t wear tight T-shirts”.

I thought life was unfair. I used to think my parents loved only my brother and hated me.

But right now, having activated the habit of reading newspapers, I seem to understand them.

Every day, the headlines shout that somewhere in some place, a girl is brutally raped.

It sends chills down my spine to even read the line, “Five year old, new born girl, eight-year old girl….”

This is reality.

And I rethink all those restrictions that my parents impressed on me and I come to the conclusion that they only did it, to only protect me.

The world is a scarier place for women these days.

I remember a story of Ruskin bond, where a little girl gets lost in the town, and is alone.

Panic strikes my heart as I imagine all the terrifying things that could happen to the innocent child.

I willed her not to go alone.

But then I remember that Ruskin Bond’s world is different from us.

It was a world where simple things happened.

It was a world, where a little girl would go out alone on an adventure and meet a boy and become friends.

Those two had nothing on their minds but pure friendship.

That was a child’s world, simple and pure.

Long gone are those days.

The crimes and ghastly things committed today have snatched that innocence of the girl children now-a-days.

They have become a source of ‘fear’ for their parents.

Shouldn’t this situation change?

We who speak about gender equally and female indiscrimination are the ones who must bring about this change. And this change must start from our very houses.

A line from our national Anthem comes to my mind,

“All indians are my brothers……”save

“It’s time for every Indian men to bring about a change to save his sister”.

 

 

0

மீனுவின் சைக்கிள் -அ.பிரியங்கா

girl‘‘அம்மா, நீ தான் அப்பாகிட்ட சொல்லணும்’‘ என்றாள் மீனு.
‘‘உனக்கு வேணும்னா நீதான் கேட்கணும். அதுவும் இல்லாம உனக்கு இப்போ எதுக்கு சைக்கிள்?’‘ வாணி கேட்டாள்.

‘‘தெருவுல இருக்க எல்லாப் பசங்களும் வெச்சிருக்காங்க மா. எனக்கும் வேணும்’‘

‘‘அவங்களாம் பசங்க  அதனால சைக்கிள் ஓட்டுவாங்க. உனக்கு எதுக்கு அது?’‘

மீனு கத்தத் தொடங்கினாள். ‘‘பசங்க மட்டும் தான் ஓட்டணுமா. ஏன் நான்லாம் ஓட்ட கூடாதா. அதுவும் இல்லாம நம்ம எதிர்வீட்டுச் சிவா-லாம் வச்சிருக்கா’‘

‘‘அவங்க நம்மல விட வசதி அதிகம் இருக்கவங்க டி. அதனால வாங்கிக் கொடுப்பாங்க. நம்மளும் அவங்களும் ஒண்ணு இல்ல, மீனு’‘ என்றாள் வாணி.

இதைப் புரிந்து கொள்ள மனப் பக்குவமோ வயதோ இல்லாத மீனு தாயின் மீது கோபித்துக் கொண்டு வெளியே சென்றாள்.

மகள் கேட்பது தவறில்லை எனத் தெரிந்தாலும் அதை ஒப்புக்கொள்ள முடியாமல் தவித்தாள் வாணி.
அவள் கூறியதும் உண்மைதான். அவர்கள் சிறிது வசதி குறைந்தவர்கள்தான்.

வாடகை வீடு. நடுத்தரக் குடும்பம். அவள் கணவன் ரகுவுக்கோ நிரந்தர வேலை இல்லை. ஒரு சிறிய கம்பெனியில் ஏதோ சிறிய வேலைதான். தற்போது வாணியும் கர்ப்பிணியாக இருந்ததால், சற்று பண நெருக்கடி வேறு. இதை அவர்கள் வெளிப்படுத்தாமல் மீனுவை நன்றாக வளர்த்தாலும், அவள் கேட்கும் இவ்வாறான ஆடம்பர செலவுகளை அவர்கள் நிறைவேற்றும் நிலையில் இல்லை.
குழந்தைப் பருவத்தில் பணம் என்னவென்றோ, அதன் மதிப்பைப் பற்றியோ அறியாததாலோ என்னவோ, மீனுவிற்கு அவள் பெற்றோர்கள் கெட்டவர்களாகவே தெரிந்தார்கள். தாயிடம் கோபித்துக் கொண்டு வெளியே வந்த மீனு, சிவானி தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டு இருப்பதைக் கண்டாள்.
மீனுவைப் பார்த்தவுடன் சிவானி சைக்கிளை நிறுத்தி, ‘‘நீயும் கொஞ்ச நேரம் என் சைக்கிளை ஓட்டு மீனு’‘ என மீனுவிற்குத் தன் சைக்கிளைக் கொடுத்தாள்.

மீனுவும் ஆசையுடன் சைக்கிளை வாங்கி ஓரிரு முறை அத்தெருவை சுற்றிவிட்டுச் சிவானியிடம் சைக்கிளைத் திருப்பிக் கொடுத்தாள்.
‘‘நீயும் சைக்கிள் வாங்கினா நாம இரண்டுபேரும் ஜாலியா சுத்தலாம் ’‘ என ஆசையுடன் கூறினாள் சிவானி.

அவள் நல்ல நோக்கத்துடன் கூறினாலும், கோபமாக இருந்ததாலோ என்னவோ மீனுவிற்கு அது தவறாகவே பட்டது.
‘‘உனக்குத் தலக்கனம். என்கிட்ட சைக்கிள் இல்லை, உன்கிட்ட இருக்குன்னு. எனக்கு இனிமேல் உன் சைக்கிளே வேண்டாம்’‘ எனக் கத்திவிட்டு வீட்டிற்குள் ஓடினாள் மீனு.

அவள் கூறியது புரியாமல் நின்றாள் சிவானி.cy 1

ரகு அன்று சற்று சீக்கிரமாகவே வீடு திரும்பினான். ‘‘மீனு எங்கே?’‘ என வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே கேட்டுக் கொண்டு வந்தான்.
‘‘அவள் அறையினுள் இருக்கிறாள். நான் எவ்வளவு கூப்பிட்டும் வெளியே வரவேயில்லை’‘ என்றாள் வாணி.

‘‘மீனு, நான் உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் வந்து பாரு’‘ என அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் ரகு.

அங்கு ஒரு மூலையில் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தாள் மீனு.
‘‘ஏன் மீனு, ஏன் கோபமாக இருக்கிறாய்?’‘ என அருகில் அமர்ந்தான் ரகு.
‘‘நீங்க நான் கேட்கறது எதுவுமே வாங்கித் தரதேயில்லை’‘ என்றாள் மீனு
.

‘‘இதோ நீ கேட்ட பென்சில் பாக்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு’‘ என அதைக் காண்பித்தான் ரகு.
உள்ளே மகிழ்ச்சியாக இருந்தாலும், அவள் கவனம் அனைத்தும் சைக்கிள் மேல் இருந்ததால் மீனு அதை வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை.
‘‘இது எனக்கு வேண்டாம். எனக்குச் சைக்கிள் தான் வேண்டும்’‘ என்றாள் மீனு.

தான் ஆசையாக மகள் கேட்பதை வாங்கி வந்து அவளை மகிழ்விக்க வேண்டும் என்ற ரகுவின் மனம் வாடியது.
‘‘சைக்கிள் எதுக்குடா உனக்கு? இதோ இந்தப் பென்சில் பாக்ஸ் னா ஸ்கூலுக்கு எடுத்துட்டுப் போகலாம். பாக்க அழகாவும் இருக்கு’‘ என அவளைச் சமாதானப்படுத்தினான் ரகு.
‘‘எனக்கு இது வேண்டாம், கடையில் திருப்பிக் கொடுத்திடுங்க’‘ என முகத்தில் அடித்தது போலக் கூறிவிட்டு நகர்ந்தாள் மீனு.

அன்று இரவு இருவருமே சரியாக உறங்கவில்லை.
ரகுவோ மகள் கேட்பதை வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோமே என வருந்தினான். சைக்கிளின் விலையே இரண்டாயிரத்திற்கும் மேல் ஆகும். வாணியின் மாத டாக்டர் பரிசோதனைக்கும் அப் பணம் வேண்டும். எதை விடுவது எதைப் பிடிப்பது எனக் குழப்பத்திலேயே இருந்தான் ரகு.
மீனுவோ தெருவில் உள்ள அனைவரும் சைக்கிள் வைத்திருப்பதையும், அவர்கள் இவளை ஏளனமாகப் பார்ப்பதையும் நினைத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு அவர் அவர் பெற்றோர் சைக்கிள் வாங்கிக் கொடுத்திருப்பதையும், தன் பெற்றோர் தன்னை விரும்பாததால் தான் தனக்கு அதை வாங்கித் தரவில்லை எனவும் நினைத்து அழுதுகொண்டே உறங்கிப் போனாள்.
ஒரு வாரம் கழித்து, மீனுவோ இன்னும் அவளது பெற்றோர்கள் மீது கோபமாகவே இருந்தாள்.
அன்று அவள் பள்ளியில் ஏதோ சமூகச் சேவை நிகழ்ச்சி நடக்க இருந்தது. அதன் ஓர் அங்கமாகப் பள்ளி குழந்தைகள் சிலரை அனாதை இல்லங்களுக்கு அழைத்துச் செல்லவிருந்தது. அதில் மீனுவும் இருந்தாள்.

‘‘என்ன ஒரு ஸ்கூல் நம்முடையது. மத்த பள்ளிகளில் வனவிலங்கு பூங்கா, சுற்றுலா தளங்கள் என அழைத்துச் செல்கிறார்கள்’‘ என அவர்களது பள்ளியை மீனுவும் அவள் தோழிகளும் கரித்துக் கொண்டனர்.

அங்குச் செல்லும் வரை விருப்பம் இல்லாமல் இருந்த மீனு அங்குச் சென்றவுடன் மாறிப்போனாள். அங்கு இருக்கும் குழந்தைகளுடன் பேசவும் விளையாடவும் செய்த மீனு அங்கு ஒரு புது உலகத்தையே கண்டாள்.
அவர்களுக்குக் கொடுப்பதற்காக எடுத்துச் சென்ற பழைய துணிகளை, அவர்கள் அவ்வளவு மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்வதைப் பார்த்து வியந்தாள். அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பொழுது, இவள் அருகில் அங்கிருந்த ஒரு சிறுவன் அமர்ந்தான். அவனோ மீனுவிடம், ‘‘தேங்ஸ் அக்கா, இந்த மாதிரி வெளியில் இருப்பவர்கள் எப்போதோ ஒருமுறை தான் எங்களுடன் இவ்வளவு க்ளோசா பழகுவாங்கா. நிறையபேரு குடுக்க வேண்டியதை கொடுத்துட்டு உடனே கிளம்பிடுவாங்க. இன்னைக்கு எனக்கு ஒரு புதுப் பொம்மை, ஒரு புதுச் சட்டை கிடைச்சிருக்கு. இன்று எனக்கு என் பிறந்த நாள் மாதிரி இருக்கு’‘ எனச் சிரித்துக் கொண்டே வெகுளியாகக் கூறினான்.

இதுவரை தனக்குக் கிடைக்காத பொருட்களையே பெரிதாக நினைத்துக் கொண்டிருந்த மீனு, அன்றே முதல் முறையாகத் தனக்கு எவ்வளவு கிடைத்திருக்கிறது என நினைக்கத் தொடங்கினாள்.
தன் பெற்றோர்கள் தனக்கு எவ்வளவு செய்திருக்கிறார்கள் என எண்ணிப் பார்த்தாள். வெறும் ஒரு பொம்மையும் சட்டையும் கிடைத்தாலே அச் சிறுவன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறான் என்றாள். தனக்குக் கிடைத்த பொருட்களுக்கும், பெற்றோருக்கும் தான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என உணர்ந்தாள்.
அன்று வீடு திரும்பியதும், அவள் பெற்றோர் மேல் அவளுக்கு இருந்த கோபங்கள் அனைத்தும் மறைந்தன. ரகுவும், வாணியுமே அவள் மாற்றத்தைக் கண்டு வியந்து போனார்கள்.
உணவு உண்டு முடித்த பிறகு, ரகு மீனுவிடம் ‘‘இன்னும் ஓரிரண்டு வாரம் பொறுத்துக்கோ மீனு, நான் உனக்குக் கண்டிப்பாகச் சைக்கிளை வாங்கிக் கொடுக்கிறேன்’‘ எனக் கூறிய ரகுவை மறுத்து, ‘‘அப்பா, சைக்கிளாம் எதுக்கு. நான் என்ன சின்னக் குழந்தையா. அதெல்லாம் வேண்டாம். எனக்கு வேற ஒண்ணு வேணும், இருங்க வரேன்’‘, என அறையின் உள் ஓடினாள் மீனு.

என்ன கேட்க நினைக்கிறாள் எனப் புரியாமல் இருந்தனர் இருவரும்.
உள் இருந்து வந்தவள் தரையில் கோடுகள் போட தொடங்கினாள், ‘‘நீங்க எனக்குச் சைக்கிள் வாங்கித் தர வேண்டாம். எனக்கு இப்போ தூக்கம் வரவில்லை என்னுடன் தாயக்கரம் ஆடுறீங்களா?’‘ எனக் கேட்டாள்.
மகள் இவ்வாறு இயல்பாகத் தங்களுடன் நேரம் கழிக்க வேண்டும் எனக் கேட்பதில் மகிழ்ந்து போன பெற்றோர், உடனே ஒப்புக் கொண்டு மூவரும் மிகச் சுவாரசியமாகச் சிரித்துக் கொண்டே விளையாட்டில் மூழ்கினர்.parents

மீனு சைக்கிளைப் பற்றி மறந்தே போனாள்.

 

 

0

நீ யார்?

நீ யார்?

அ.பிரியங்கா

fox

ஒருமுறை ஒருவன் ஒரு காட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது, கால்களே இல்லாத ஒரு நரி ஒன்று ஒரு குகைக்கு அருகே படுத்திருப்பதைக் கண்டான்.

என்ன ஒரு ஆச்சரியம், கால்களே இல்லாமல் எவ்வாறு உணவு தேடி அது சாப்பிடும் என நினைத்தான். அன்று இரவு அங்கேயே ஒரு மரத்திற்குப் பின் ஒளிந்து கொண்டு கவனித்தான்.

காலையில் ஒரு சிங்கம் ஒன்று இறைச்சியை எடுத்து வந்து நரிக்குக் கொடுத்துவிட்டு தானும் உண்டது.

அவனோ, ‘‘இப்பொழுது எனக்குப் புரிந்து விட்டது. இதுதான் வாழ்க்கையின் இரகசியம். கடவுள் மேல் நான் நம்பிக்கை வைத்தால் அவரே என்னைப் பார்த்துக் கொள்வார். நான் எதுவும் செய்யத் தேவையில்லை’‘ என முடிவுக்கு வந்தான்.
அதனால், வேலைக்குச் செல்லாமல், எந்தப் பணியும் செய்யாமல் கடவுள் உதவி செய்வார் என்றே இருந்தான்.
சாப்பிட எதுவும் கிடைக்காமல் பசியால் வாடினான்.
இவ்வாறாக, இரண்டு நாட்கள் கழித்து, கடவுள் அவன் கனவில் வந்தார். ‘‘முட்டாளே, நரியாக இருக்க நினைக்காதே. சிங்கமாய் இருக்க விரும்பு.’‘ lion

0

யார் பலசாலி?

யார் பலசாலி?

அ.பிரியங்கா

sirpi

ஒரு காலத்தில் ஒரு சிற்பி வாழ்ந்து வந்தான். கல்லில்  சிற்பங்கள் செய்வதே அவனது பணி. ஆனால், அவனுக்கோ அவன் ஏழையாக இருப்பதாக எண்ணம் இருந்தது.
ஒருமுறை ஒரு செல்வந்தனின் வீட்டை கடந்து சென்றான். அப்போது அவ்வீட்டில் உள்ள செல்வங்களைப் பார்த்து வியந்தான்.

‘‘அச்செல்வந்தன் எவ்வளவு வளமாக வாழ்கிறான், நானும் அவனைப் போல ஆகவேண்டும்’‘ என எண்ணினான்.

அவன் நினைத்தது போலவே அவனும் செல்வந்தனாக மாறினான். அவனைப் பார்த்து ஏழைகள் அனைவரும் அவன் மேல் பொறாமை கொண்டனர்.

செல்வந்தர்கள் அனைவரும் அரசனுக்குக் கீழ்ப்படிந்து போவதைக் கண்டான்.
அரசனாக இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தான்.
அவன் விரும்பியதுபோலவே அரசனானான்.
செல்வந்தர்கள் அவனை வணங்கியதைக் கண்டு மகிழ்ந்தான்.
ஒரு முறை, ஒரு பயணம் சென்றபோது சூரியன் அவனை வாட்டுவதைக் கண்டான்.
sunசூரியன் இவ்வளவு பலமானவான, நான் அவனைப்போல ஆக வேண்டும் என நினைத்தான்.
அவன் சூரியனானான். மக்கள் அனைவரும் அவனுடைய கடும் சூட்டை தாங்காமல் அவனைத் திட்டினர்.
அவன் ஒரு கருமேகம் ஒன்றைக் கண்டான். சூரியனையே தடுக்கக்கூடிய அக் கார்மேகமாக மாற வேண்டும் என விரும்பினான்.
அவன் ஆசையும் நிறைவேறியது. wind
மேகமாக இருந்த அவனைக் காற்று வேகமாக அடித்துச் சென்றது. காற்று இவ்வளவு பலமானதா, நான் காற்றாக மாற வேண்டும் என அவன் நினைத்தான். நினைத்ததும் நிறைவேறியது. stone
காற்றாகச் சுற்றித் திரிந்த அவனால் கல்லைக் கடந்து செல்ல முடியவில்லை.
கல்  இவ்வளவு பலமானதா என எண்ணியவன் கல்லாக மாற ஆசைப்பட்டா ன்.
கல்லாக மாறிய அவன் ‘‘கல்லை விடப் பலமானது வேறு ஒன்றும் இல்லை’‘ என நினைத்தபோது, சிற்பியின் உளிகள் அவனைச் செதுக்கத் தொடங்கின.

0

சொர்க்கத்திற்குச் செல்லும் வழி!

சொர்க்கத்திற்குச் செல்லும் வழி!பணிவு 1
  அ.பிரியங்கா

ஒரு காலத்தில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவரைத் தேடி பக்தர்கள் வருவது வழக்கம்.
ஒருமுறை அவரைத் தேடி ஒரு போர்வீரன் வந்தான்.
முனிவரிடம் என்று, ‘‘எனக்கு ஒரு கேள்வி எழுந்துள்ளது. உண்மையிலேயே சொர்க்கம் நரகம் செல்ல வழிகள் உள்ளதா?’‘ எனக் கேட்டான்.
முனிவர் அவனைப் பார்த்து, ‘‘நீ யார்?’‘ என்று கேட்டார்.
‘‘நான் ஒரு மாவீரன்’‘ என்று அவன் பதிலளித்தான்.
‘‘என்ன? நீ ஒரு மாவீரனா? உன் முகம் ஒரு பிச்சைக்காரனது முகம் போல இருக்கிறதே. உன்னை எல்லாம் எந்த மன்னன் வீரனாக நியமித்தார்?’‘ எனக் கேட்டார் முனிவர்.
இதைக் கேட்ட வீரனிற்கு அளவு கடந்த கோபம் வந்தது.
தன் வாளை எடுத்து முனிவரின் கழுத்தில் வைத்து ‘‘என்னையா ஏளனமாகப் பேசுகிறாய்’‘ எனக் கத்தினான்.
முனிவர் அமைதியாகக் கூறினார், ‘‘இதோ நரகத்திற்குச் செல்லும் வழி’‘
தவறை உணர்ந்த வீரன், வாளை வீசி எறிந்து விட்டு முனிவர் முன்பு வணங்கி நின்று மன்னிப்பு கேட்டான்.
முனிவர் கூறினார், ‘‘இதோ, இதுவே சொர்க்கத்திற்குச் செல்லும் வழி!’‘ பணிவு

0

வடசட்டி தெரியுமா?

வடசட்டி தெரியுமா?

ஜ.பிரேமலதா

vada
மதனுக்கு நான்கு வயது. கிராமத்திற்கு வந்திருந்தான். தாத்தா பாட்டியோடு தங்கியிருப்பதற்கு அவனுடைய பெற்றோர் இருவரும் வேலை விசயமாக வட நாட்டிற்குச் செல்வதால் நான்கு நாட்கள் தங்கிச் செல்ல வந்திருந்தான். அவனுக்குத் தாத்தா பாட்டியின் பரந்த பெரிய வீட்டை விட அருகிலுள்ள நிறைய குழந்தைகளின் கபடமில்லா பார்வையும் சிரிப்பும் நெருக்கமும் மிகவும் பிடித்திருந்தது. என்ன ஒரு சிக்கல்தான். பல வார்த்தைகள் அவனுக்குப் புதியதாக இருந்தன. நகரத்தில் அவன் அதைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை.

பகல் முழுதும் அக்கம்பக்கத்து வீடுகளிலேயே கழித்தான். சாப்பாடு நேரம் வந்துவிட்டால் பாட்டி வந்து அழைத்துச் செல்வாள். ‘சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பான். சரியாக சாப்பிட மாட்டான்’ என்று அவன் அம்மா சொன்னது பொய் என்பது போல நிறைய சாப்பிடுவான். சீக்கிரம் சாப்பிடுவான். உடனே விளையாடக் கிளம்பிவிடுவான்.

இரண்டு நாள் இப்படியே கழிந்தது. மூன்றாம் நாள் தான் இரவில் தாத்தா பாட்டிக்கு தலைவலி ஆரம்பித்தது. இரவில் தூக்கம் வரவில்லை மதனுக்கு. வீட்டில் அவனுக்கு வாங்கி வைத்திருந்த பொம்மைகளை வைத்து விளையாடினான். அவனுடைய அம்மா அப்பா வந்து விட்டது என்றெண்ணி தாத்தா அவனுக்குக் கதைகள் சொன்னார். நடு இரவே ஆகி விட்டது. மதன் தூங்குகிற மாதிரி தெரியவில்லை.

பொம்மைகளை வைத்து விளையாடி போரடித்து விட்டது அவனுக்கு. உடனே பாட்டியிடம் நான் தான் அம்மாவாம். இப்ப நான் சமைப்பேனாம் என்றான். பாட்டியும் தூக்கக் கலக்கத்தில் வேறு வழியில்லாமல் சரி என்றாள். கரண்டி, தட்டு, சொம்பு எல்லாம் விளையாட்டுப் பொருட்களாயிற்று. திடீரென்று ‘வடசட்டி’ என்றான். உடனே பாட்டி இரும்பு வடசட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தாள்.
அதில் மற்ற பொருட்களைப் போட்டு விளையாடுவான் என நினைத்தான். காலில் போட்டுக் கொள்வான் என்ற அச்சம் வேறு. ஆனால் அதைத் தூக்கி வரும் போதே இது இல்லை’ என்றான். உடனே பாட்டி இதுதான் ‘வடசட்டி’ என்றாள். உடனே அவன் இதில்லை. வட்டமாக இருக்கும்’ என்றான்.
‘வட சட்டி வட்டமாத்தாண்டா இருக்கும்’ என்றாள் கொட்டாவி விட்டபடி. ‘இதில்லை. சின்னதா இருக்கும்’ என்றான். உடனே சின்ன வடசட்டி கொண்டு வந்தாள். ‘இதுவுமில்லை’ என்றான். ‘பின் ஓட்டையாக இருக்கும்’ என்றான்.

பாட்டிக்கு சுத்தமாகத் தூக்கம் தொலைந்து போய் விட்டது. அவன் சொன்னது ஒரு புதிர்போல அவளுக்கிருந்தது. எப்படியாவது அவனைச் சமாளித்து தூங்கச் செய்துவிட வேண்டும் என நினைத்தாள்.

‘நாளைக்குத் தரேன்’ இப்ப தூங்கு என்றான். அவனோ ‘இப்பவே வடசட்டி எனக்கு வேணும்’ என்றான். தாத்தா உடனே ‘சல்லடையாக இருக்கும்’ என்றார். பாட்டி அதையும் எடுத்து வந்தாள். அவனோ ‘இதுவும் இல்லை’ என்றான்.

‘யார்ரா உனக்கு இந்த வடசட்டி பத்தி சொன்னது’ என்றாள். ‘பக்கத்து வீட்டு ரங்கு’ என்றான். நடு ராத்திரில போய் எப்படிடா கேட்கிறது. எதை வட சட்டின்னு சொன்னானுத் தெரியலியே படுபாவி’ என்று ரங்குவைத் திட்டித் தீர்த்தாள்.
தாத்தா மதனிடம் எதை எதையோ காட்டிக் கேட்டார்.

ஆனால் அவன் எதையும் இல்லையென்றே சொன்னான். அடம் வேறு நேரமாக நேரமாக மிகுதியாக அதிகமாயிற்று. தாத்தாவும் பாட்டியும் என்ன கூறியும் சமாதானமாகவில்லை.

‘ரங்கு வீட்டில இருக்கு. நம்ம வீட்டிலயும் இருக்கும்’ என்றான்.

மதன் அழ ஆரம்பித்தால் ஊரையே கூட்டிவிடுவான் எனப் பயந்தார் தாத்தா. என்ன செய்வதென்றே இருவருக்கும் புரியவில்லை.

தாத்தா ‘அவனிடம் நீ என்ன கேட்டாய்’ என்றார்.

‘வடசட்டி’ என்றான். ‘சரி ரங்கு வீட்டில அதை வைச்சு என்ன பண்ணுவாங்க’ என்றார்.

‘ஆத்துவாங்க’ என்றான். அவர் ‘என்ன’ என்றார் புரியாமல்.

‘டீ ஆத்துவாங்க’ என்றான்.

அவருக்கு ஏதோ புரிந்தது போல சமையலறைக்குள் நுழைந்து சுவற்றில் மாட்டியிருந்த ‘வடிகட்டியைக்’ கொண்டு வந்தார். ‘இதேதான் இதேதான் வடசட்டி’ என்று மதன் மகிழ்ச்சியில் கத்தினான்.

fil
பாட்டிக்கு சிரிப்பு தாங்கலை. ‘டேய் பயலே இது வட சட்டி இல்லடா. வடி கட்டி’ என்றாள். அவனோ ‘இல்ல வடசட்டிதான். ரங்கு சொன்னான்’ என்றான். சிறிது நேரத்தில் அதை கையில் வைத்தபடி விளையாடியபடியே உறங்கியும் போனான்.

0

வேட்டையாடப் போவோமா?

வேட்டையாடப் போவோமா?

ஜ.பிரேமலதா

tiger
ஒரு ஊரில் ஒரு மன்னன் இருந்தான். அவனுக்கு நெடு நாட்களாக வேட்டையாட ஆசை. உடனே தன் படைகளோடு காட்டிற்கு கிளம்பிவிட்டார். வெகுநேரமாகியும் ஒரு விலங்கைக்கூட வேட்டையாட முடியவில்லை. மற்றவர்கள் களைத்துப் போனார்கள். மன்னருக்கோ ஒரே கோவம். ஒரு விலங்கு கூட அகப்படவில்லையே. தொடர்ந்து வேட்டையாட விரும்பினார் காடு பெருங்காடு. சூழ்ந்திருந்த மரங்கள், அடர்ந்த புதர்கள் விலங்குகள் தப்பித்துக் கொள்ள காரணமாக இருந்தன. மன்னர் இறுதியில் களைப்படைந்து போனார்.

birds அப்போது வானில் ஒரு பறவைக் கூட்டம் பறந்தபடி சென்றது. உடனே விலங்குகளை வேட்டையாட முடியாத கோபத்தில் வானில் பறந்த பறவைகளையாவது குறி பார்க்கலாம் என அம்பை விடுத்தார். என்ன அதிர்ஷ்டம். ஒரு பறவை அம்பு பட்டு துடிதுடித்து கீழே வந்து விழுந்தது. மன்னரும் திருப்தியடைந்து இளைப்பாற ஒரு மரத்தடியில் படுத்தார். அவருக்கு இறைவன் மீது கோபம் வந்தது. முயல்களுக்கும், மான்களும் இப்படி பறக்கும் ஆற்றலைத் தந்திருந்தால் அவை பறக்கும்போது இப்படி கீழிருந்து அம்பு எய்தி வீழ்த்தியிருக்கலாமே. இந்த கடவுள் ஏன் அவ்வாறு செய்யவில்லை என கடவுளைச் சபித்தபடியே களைப்பில் நன்றாக உறங்கிப் போனார்.

அப்போது அவரைத் தேடி வந்த வீரர்கள் அவர் மரத்தடியில் படுத்திருப்பதை அறியாமல், மரத்தின் மேல் அமர்ந்திருந்த புறாவை நோக்கி அம்பு எய்தனர். அம்பு பட்டு புறா நேராக வந்து மன்னரின் நெஞ்சில் தொப்பென்று விழுந்தது. மன்னர் அலறியடித்தபடி எழுந்தார். அவரை அப்போதுதான் பார்த்த வீரர்கள் ஓடி வந்தனர். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். மன்னருக்கோ முதலில் கோபம் வந்தது. பின் இது பறக்கும் முயலாக இருந்திருந்தால் என்னவாயிருக்கும். பறக்கும் மானாக இருந்திருந்தால் என் நிலை என்னவாயிருக்கும் என சிந்தித்தார். இறைவனின் படைப்பின் சிறப்பை வியந்தார். தன் தவறை உணர்ந்தார். வீரர்களை மன்னித்துவிட்டார்.

0

சூழ்நிலை கைதிகள் – அ.பிரியங்கா

mother and dau

சூழ்நிலை கைதிகள்

கதை – அ.பிரியங்கா

“அப்பா, நாம மட்டும் போகலாம். அம்மா வேண்டாம்” என்றாள் யாழினி.

“அம்மாவையும் கூட்டிட்டுப் போலாம் கண்ணா, அவ வீட்ல தனியா இருப்பா இல்ல” என்றார் சுரேஷ்.

“சரி” என்று பாதி மனதுடன் கூறினாள் யாழினி.

அவளுக்கு இன்னும் கோபம் குறையவில்லை. அவள் தாய் தேவியுடன் பேசுவதாக இல்லை. இரண்டு நாட்கள் ஆகி விட்டன. தேவியும் எவ்வளவோ பேச முயன்று விட்டாள்.

“நான் உன்கிட்ட பேச மாட்டேன். நீயும் பேசாத என்கிட்ட” என முடிவாகக் கூறிவிட்டாள் யாழினி.

ஆம்மா தன்னை அடித்தது யாழினிக்கு நினைவில் வந்து கொண்டே இருந்தது. அவள் தேவியை மன்னிக்கப் போவதாக இல்லை.

இரு நாட்களுக்கு முன் தான் அச்சம்பவம் நடந்தது. யாழினி எப்போதும் போலக் காலையில் பள்ளிக்குச் சென்றாள். சுரேஷீம் வேலைக்குச் சென்று மாலை தான் வீடு திரும்புவதால் வீட்டில் தேவி மட்டுமே இருந்தாள்.

அவ்வளவாக நெருங்கிய சொந்தங்கள் இல்லாததாலும், சிலருக்கு மட்டுமே தெரிந்ததாலும், அன்று மதியம் வீட்டில் அடித்த தொலைபேசி தேவிக்கு ஆச்சரியம் ஊட்டியது.

“யாராக இருக்கும், அதுவும் இந்த நேரத்தில்” என்று யோசித்துக் கொண்டே தொலைபேசியை எடுத்தாள் தேவி.

“ஹலோ, யாழினி வீடா. நான் யாழியின் பள்ளி ஆசிரியர் பேசுகிறேன்” என எதிர்முனையில் குரல் கேட்டது.

தேவி பயந்து போனாள், “யாழினியின் பள்ளியில் இருந்தா. ஐயோ யாழினிக்கு ஏதாவதாக இருக்குமோ. காலையில் வேறு ஒழுங்காகச் சாப்பிடவில்லை. நேரமாகி விட்டது என இரண்டு இட்லிகளுக்கு மேல் எதுவும் உண்ணாமலே சென்றாளே. என்னவாக இருக்குமோ” என மனதில் எழுந்த கேள்விகளைப் பொறுத்துக் கொண்டு, “ஆமாங்க மேடம், யாழினியின் தாய் தான் பேசறேன். சொல்லுங்க” எனக் கேட்டாள்.

“அவள் தந்தைக்குத் தான் கால் பண்ணேன் அவர் எடுக்கவில்லை. அதான் தங்களுக்கு அழைத்தேன். நீங்க பிசியா இல்லனா கொஞ்சம் அவள் பள்ளிவரை வர முடிம்” எனக் கூறினார் அந்த மேடம்.

“பள்ளி வரையா? யாழினிக்கு ஏதாவது ஆகி விட்டதோ, மேடம்” எனத் தயங்கிக் கொண்டே கேட்டாள் தேவி.

“சேச்சே. அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க. உங்க பொண்ணு யாழினி பத்தி கொஞ்சம் பேசணும். பள்ளி வந்த பிறகு விவரங்களைச் சொல்றேன்” என்றார் அவர்.

சரி எனக் கூறிவிட்டு பள்ளிக்குப் புறப்படத் தொடங்கினாள் தேவி. மனதில் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமோ எனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். ஒரு வழியாகப் பள்ளியை அடைந்தபின், தலைமை ஆசிரியர் அறையை நோக்கி நடந்தாள்.
அங்கு அறையின் முன் யாழினியும் இன்னொரு மாணவியும் நின்று கொண்டிருந்தனர். யாழினியை பார்த்த பின்புதான் தேவிக்கு உயிரே திரும்பி வந்தது.

“உனக்கு ஒன்றும் ஆகவில்லையே. நன்றாகத்தானே இருக்கிறாய்” என மகளிடம் சென்று கேட்டாள் தேவி.

அதற்குள் பள்ளி தலைமை ஆசிரியை அங்கு வந்து விட்டார். “வாருங்கள்” எனத் தேவியை அறைக்குள் அழைத்துச் சென்றார்.

“என்ன விஷயமாக என்னை அழைத்தீர்கள் மேடம்” எனக் கேட்டாள் தேவி.

“உங்கள் மகள் செய்த காரியத்தைக் கூறத்தான் அழைத்தேன். தங்களை யாழினி நல்ல மாணவி தான். ஆனால் அதற்காக அவள் மீது எழும் குற்றச்சாட்டுகள் பொய் என ஆகிவிடாது” என்றார் தலைமை ஆசிரியை.

“குற்றமா? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை” என்றாள் தேவி குழப்பமாக.

“உங்கள் மகள் அருகில் நிற்கிறாளே, அப்பெண் மதுமிதா. அவள் உங்கள் மகள் யாழினி மேல் குற்றம் சுமத்துகிறாள். யாழினி அவளுடைய பணம் ஐநுஹ்று ரூபாயை திருடி விட்டாளாம்.” என்றார் ஆசிரியை.

தான் கேட்பதை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் அமர்ந்து இருந்தாள் தேவி.

ஆசிரியை மீண்டும் தொடங்கினார். “பணம் வைத்த இடம் யாழினியையும் மதுமிதாவையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லையாம். அதனால் தான் தங்கள் மகளைத் தவிர வேறு யாரும் அதை எடுத்திருக்க முடியாது என நினைக்க வேண்டியதாயிற்று. பெற்றோருக்குத் தெரியாமல் குழந்தைகளைத் தண்டிப்பது எங்கள் நிர்வாகத்தின் முறை அல்ல.

அதனால்தான் தங்களை அழைத்தோம். திருடுவது மிகப்பெரிய குற்றம் ஆகும். தங்கள் மகள் யாழினியை தயவு செய்து கண்டியுங்கள். இதுபோலக் குற்றங்கள் எதுவும் இனி வரும் நாட்களில் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என முடித்தார் தலைமை ஆசிரியை.

தேவி திகைத்துப்போய் அமர்ந்து இருந்தாள்.

“யாழினியா திருடினாளா” என்பது மட்டுமே அவள் காதுகளில் கேட்டது.
அமர்ந்த நாற்காலியில் இருந்து எழுந்தாள் தேவி. நேராக யாழினியின் முன் சென்றாள்.

“அம்மா நான் எதுவும் பண்ணல மா, நான். . . . . . .” எனப் பேச தொடங்கினாள் யாழினி.

“பளார்” என அவள் கன்னத்தில் அறைந்தாள் தேவி.

கண்களில் தாரை தாரையாக நீர் கொட்டிய யாழினியை திரும்பிக்கூடப் பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்தாள் தேவி.

அன்று வீடு திரும்பிய மதியம் முழுவதும் ஏதோ பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்த சோபாவை விட்டு எழாமல் அமர்ந்திருந்தாள்.

“என்ன இங்கு உட்கார்ந்திருக்க” என வீட்டிற்கு வந்த சுரேஷ் கேட்ட கேள்விக்குக் கூட அவள் பதில் அளிக்கவில்லை.

என்ன நடந்தது என விசாரித்த சுரேஷிடம் நடந்த அனைத்தையும் கூறி அழத் தொடங்கினாள் தேவி.

“என் மகள் இவ்வாறு செய்வாள் என நான் கனவிலும் நினைத்தது இல்லை. நான் இதற்காகவா நான் வாழ்ந்த ஊரை விட்டு இவ்வளவு தொலைவில் வந்தேன். மீண்டும் ஒரு குடும்பத்தாரின் திருட்டுப் பட்டத்தைத் தலையில் சுமக்க எனக்கு மனதில் வலு இல்லை, யாழினியை நான் அவ்வாறு வளர்க்கவும் இல்லை” எனப் புலம்பித் தீர்த்தாள்.

“யாழினி அப்படியெல்லாம் செய்யும் பெண் அல்ல தேவி. நீ மனதை வருத்தி கொள்ளாதே. நான் அவளிடம் பேசுகிறேன். நீ அமைதியாக இரு” என்றான் சுரேஷ்.

அவ்வாறே யாழினி வீடு வந்ததும் அவளை அழைத்துப் பேசினான்.

“நான் அந்தப் பணத்தை எடுக்கவில்லை அப்பா. மதுமிதா வீணா என்மேல பழி போடறா. நீங்களாவது நம்புங்க” என்றாள் யாழினி. நு
“நான் உன்னை நம்பறேன் யாழினி, உங்க பள்ளிக்கு . . . .” எனப் பேசிக் கொண்டிருந்த சுரேஷை தடுத்து, ”போன வாரம் எங்கிட்ட காசு ஒரு நாறு ரூபாய் கேட்டப்போ நான் மறுத்து விட்டேன். ஆதே மாதிரி அந்த உண்டியலை உடைக்கலாம்னு நீ கேட்டப்போவும் வேண்டாம்னு சொன்னேன். அதனால தான் இப்படித் திருடிட்டு வந்து நிக்குறியா. அப்படிப் பதினைந்து வயசு பொண்ணுக்கு எதுக்குடி காசு. ஏன்டி இப்படி நீயும் என்னைக் கஷ்டப்படுத்துற எனக் கத்தினாள் தேவி.

யாழினி கண்களில் நீர் தேங்கியபடி தன் அறைக்கு ஓடினாள்.
“அவமேல ஏன் இப்படிக் கோவத்த காட்ற” எனச் சொல்லிக்கொண்டே யாழினியை சமாதானப்படுத்தச் சென்றான் சுரேஷ்.

அன்று இரவு யாழினியும் சரி தேவியும் சரி ஒழுங்காகத் தூங்கவே இல்லை.
மறுநாள் யாழினியுடன் பள்ளிக்குச் சென்றான் சுரேஷ்.
மதியம் வீட்டிற்குத் திரும்பியவன் நேராகத் தேவியிடம் சென்றான்.
“நான் தான் அவ ஒன்னும் தப்புப் பண்ணியிருக்க மாட்டான்னு சொன்னேன்ல. அவளோட வகுப்புலயே இன்னொரு பொண்ணு இவங்க அந்தப் பணத்தைப் பற்றிப் பேசியதை ஒட்டுக் கேட்டுருச்சாம். அந்த வகுப்புல இருக்க எல்லாத்தயும் விசாரிச்ச அப்போ தெரிய வந்துச்சு. மதுமிதா-ங்ற பொண்ணும் நம்ம யாழினியிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டா. அந்தப் பள்ளி தலைமை ஆசிரியையும் இப்படி விசாரிக்காம நம்ம யாழினியை சந்தேகப் பட்டதுக்கு வருந்துனாங்க. நீதான் தோ அவள நம்பாம இப்படிக் கை ஓங்கிட்ட. யாழினி அப்படிலாம் பண்ண மாட்டா” எனச் சுதேஷ் பேசப்பேச தேவியின் கண்களில் கண்ணீர் சிந்தியது.
மாலை யாழினியின் வருகைக்கு மிகவும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தாள்.
யாழினியின் பள்ளிப்பேருந்து வந்த சத்தம் கேட்ட உடன் வாசலுக்கு ஓடினாள். யாழினியோ தன் அம்மாவை பார்க்காதவாறு வீட்டிற்குள் நுழைந்தாள். தாய் எவ்வளவு பேச முயன்றும் அவள் பேசவில்லை.
இன்றும் சினிமாவிற்குப் போகலாம் என முடிவு எடுத்த பொழுது தேவியுடன் வர அவள் தயங்கினாள். ஒரு வழியாக மூவரும் சினிமா பார்த்து விட்டு வெளியே வரும்பொழுது ஒரு மதிக்கத்தக்க வயதுடைய ஒருவர் தேவியை அணுகினார்.
“தேவி, நீயா இது” என ஆச்சரியத்துடன் கேட்டார்.
தேவியின் முகத்திலும் அதே ஆச்சரியம். “சிவா, நீயா. எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன” என இருவரும் மகிழ்ச்சியோடு தழுவினார்.

“என்னங்க ஞாபகம் இருக்கிறதா, என் தம்பி சிவா” எனச் சுரேஷிடம் அறிமுகப்படுத்தினாள்.
சுரேஷும் சிவாவைப் பார்த்து புன்கையுடன் தலை அசைத்தான். நால்வரும் வீட்டை சென்று அடைந்தனர்.

சிவாவும் தேவியும் பார்த்துக் கொள்ளாத வருடங்களின் கதைகளைப் பரிமாறிக் கொண்டனர். தேவி பெருமிதத்துடன் யாழினியை அழைத்து, “என் மகள் யாழினி” எனக் கூறினாள்.

“இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாளே. யாழினி, நான் உனக்கு மாமா. உனக்கு என்னை யார் என்று தெரிய வாய்ப்பில்லை. நீ அப்படியே எங்கள் அம்மாவை போல இருக்கிறாய். குடும்பங்கள் இவ்வாறு உடைந்து போகும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்” எனக் கூறினான்.

தேவியும் சிவாவும் அமைதியாகிப் போனார்கள். சுரேஷ் யாழினியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
“யாருப்பா அந்த அங்கிள், எனக்கு மாமானு சொல்றாரு” எனச் சுரேஷிடம் கேட்டாள் யாழினி.
சற்று அமைதிக்குப் பிறகு சுரேஷ் பேசத் தொடங்கினான்.

“அது ஒரு பெரிய கதை, யாழினி. உனக்குத் தெரிந்து கொள்ள வேண்டிய வயசும் வந்திருச்சு. இது நீ பொறக்கறதுக்கு முன்னாடியே நடந்தது. உங்க அம்மா கிராமத்துல தான் பொறந்தது வளர்ந்தது எல்லாமே. அவ்வளவு வசதியெல்லாம் ஒண்ணும் இல்ல. ஏழைங்கதான். ஒரு காலத்துல உங்க பாட்டி தாத்தா எல்லாம் ஓகோன்னு வாழ்ந்தவங்க தான். ஏதோ நஷ்டமாகி ஏழை ஆய்ட்டாங்க. உங்க தாத்தா ஏதோ பணக்கார வீட்டுல வேலை பார்த்துட்டு இருந்தார். உங்க அம்மாக்கு கல்யாண வயசு வந்துச்சு. உங்க மாமா, உள்ள உட்கார்ந்திருக்காரே அவர் அப்போ படிச்சிட்டு இருந்தார். அப்போ, உங்க தாத்தா செலவு அதிகமாய்டதுனாலயோ என்னவோ இல்ல கடன் கட்ட முடியாததாலோ, அவள் வேலை பார்த்த பணக்கார வீட்டில இருந்து நிறையப் பணத்தைத் திருடிட்டாரு. திருடின பிறகு ஊர்ல மாட்டிக்கிட்டாரு. ஆவர ஜெயில்ல (துயடை) போட்டுட்டாங்க. கிராமத்துல இருந்து உங்க பாட்டி, அம்மா, மாமா மூணு பேரையும் ஒதுக்கி வெச்சிட்டாங்க. ஜெயில்லயே ஒரு ஆறு மாசம் இருந்த உங்க தாத்தா தற்கொலை பண்ணிக்கிட்டாரு. குடும்பப் பேர் கெட்டு போனதால உங்க அம்மாவுக்கும் வரம் அமையல்ல. ழுடிப்பு பாதியிலேயே நின்னதால உங்க மாமா வாழ்க்கையும் வீணாயிடிச்சு. இப்படிக் குழந்தைங்க இரண்டு பேரும் கஷ்டப்படுறத பார்க்க மனசில்லாம உங்க பாட்டியும் இறந்துட்டாங்க.

உள்ளூருல வேலை கிடைக்கலனு, வெளியூர் போய் வேலை தேட போயிட்டாரு உங்க மாமா. உங்க அம்மாவும் இந்த ஊருக்கு வேலை தேடி வந்துட்டாங்க. அப்படி இருக்கப்போதான் நாங்க சந்திச்சிக்கிட்டோம். அப்போல்லாம் போன் வசதி இல்லாததால உங்க அம்மாவால அவங்க தம்பி கூடத் தொடப்புல இருக்க முடியல.

நானே அவரைப் போட்டோவுல தான் பார்த்திருக்கேன். அவங்க குடும்பமே சிதைந்து போனது அந்தத் திருட்டால தான்-னு உங்க அம்மா அடிக்கடி சொல்லுவா, அதனால தான் நீ திருடின எனக் கேள்விபட்ட போது உங்க அம்மா இப்படி அவ நிதானத்தை இழந்துட்டா. நீயும் எங்க அந்தக் குற்றத்தை பண்ணிடுவயோ-னு அவ பயந்துட்டா. மத்தபடி அவ உன் அளவுக்கு வேற யாரையும் நேசிச்சதேயில்லை” எனக் கூறி முடித்தான் சுரேஷ்.

இதை அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் யாழினி.
மறுநாள் விடிந்த பிறகு, சிவா புறப்படத் தொடங்கினான். மறுபடியும் நிச்சயமாக வந்து சந்திப்பதாகக் கூறிவிட்டுச் சென்றான். அன்று மாலை வீடு திரும்பிய யாழினி அறையிலேயே ஏதோ செய்து கொண்டிருந்தாள். தேவியையும் உள்ளே வர அனுமதிக்கவில்லை.

இரவு சமைத்து முடித்துவிட்டு வந்த தேவியின் கண்களில் சோபாவில் இருந்த ஒரு கவர் பட்டது. அதன் அருகே ஒரு கடிதம் இருந்தது. யாழினியின் அழகிய கையெழுத்தில் எழுதி இருந்தது.

“அம்மா, சாரி. அப்பா தங்களைப் பற்றிக் கூறினார். நடந்ததில் தவறு எதுவும் தங்கள் மேல் அல்ல. அதேபோல் அன்று பள்ளியில் நடந்ததிலும் நீங்கள் என்னை அடித்ததிலும் தவறு இல்லை. நான் அப்பணத்தை எடுக்கவில்லை. நீங்கள் என்னைச் சந்தேகப்பட்டதால் கோபித்துக் கொண்டேன். நாம் அனைவரும் இதில் சூழ்நிலை கைதிகளாகி விட்டோம். அன்று தங்களிடம் பணம் கேட்டதற்கும், உண்டியலை உடைக்கச் சொன்னதற்கும் காரணம் அக்கவரில் உள்ளது.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”

அக்கவரை திறந்த தேவிக்கு ஆச்சரியம். உள்ளே ஒரு பட்டு புடவை இருந்தது. தேவி அதைக் கண்டதும் மகிழ்ச்சியில் சிலை போல் அமர்ந்துவிட்டாள். சுரேஷ் உள்ளே நுழைந்தான்.
“நானும் யாழினியும் தான் வாங்கினோம். அவள் தான் உனக்கு இதைச் செலக்ட் செய்தார்” எனக் கூறினான்.

யாழினியின் அறை கதவைத் திறந்தாள். யாழினி மேஜை மேல் அமர்ந்திருந்தாள். யாழினியை கட்டித் தழுவி கொஞ்சினாள் தேவி.11

“தன் மகள் தன் தவறை புரிந்து கொண்டதற்கும், தன்னை மன்னித்ததையும் நினைத்துப் பெருமிதம் கொண்டாள். இருவரும் இருவரையும் முழுதாகப் புரிந்து கொண்டனர். என்னவாக இருந்தாலும் தாயும் சேயும் இரு உடல் ஒரு உயிர் அல்லவா, எவ்வாறு புரிந்து கொள்ளாமல் இருக்க முடியும்.

0

தாய் ஆனவள் நம் உடலில் ஓர் அங்கம் கட்டுரையாளர் அ.பிரியங்கா

mother

நீங்கள் உங்கள் தாயை பார்க்கும் பொழுது, உலகிலேயே உள்ள தூய்மையான நேசத்தையும் காதலையும் பார்க்கிறீர்கள் எனச் சார்லி பென்னடோ கூறுவார்.
அவர் கூறிய வார்த்தைகளில் அவ்வளவு உண்மை அடங்கி இருக்கிறது. இவ்வுலகில் நாம் எந்த ஒரு காலக் கட்டத்திலும் சரி எத்தனை மனிதர்களைச் சந்தித்து இருந்தாலும் சரி நம் தாய் அளவிற்கு நம்மை யாரும் நேசித்திருக்க முடியாது. அஃது எவ்வாறான நேசம் என்றால், நம்மிடம் திரும்பி எந்த ஒரு கைமாறையும் எதிர்பார்க்காமல் வாழ்நாள் வரை பொழிந்து கொண்டிருக்கும் நேசம் ஆகும்.
நாம் யார் யாரிடமோ நாம் அவர்களை நேசிக்கிறோம் எனக் கூறுகிறோம். ஆனால், ஒரு முறையாவது நம் தாயிடம் அவளை நேசிப்பதாகக் கூறி இருக்கிறோமா.
அந்த வார்த்தைகளைத் தவிர அவளுக்கு மகிழ்ச்சி அளிப்பது வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

எந்த ஒரு தாயிடம் கேட்டாலும் அவள் கூறுவாள், குழந்தைகளைப் பெற்றெடுப்பதை விடக் கடினமானது அவர்களை நல்ல மனிதர்களாக வளர்ப்பது தான் என்று.

இதற்கு ஒரு சினிமா ப் பாடலே உதாரணம் காட்டலாம்.
‘‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’‘
வளர்ப்பு என்பதில் கூடத் தந்தையின் வளர்ப்பை அவர்கள் குறிப்பிடவில்லை. தாயின் வளர்ப்பையே குறிக்கிறார்கள்.

ஏனென்றால் பிறப்பின் பின் அக்குழந்தைக்கு விவரம் தெரியும் வரை தாயிடமே இருக்கின்றது. தாயைப் பார்த்துதான் உலகத்தைக் கற்றுக் கொள்கிறது. தாயைப் போலத் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றது.
ஆனால் குழந்தை எவ்வாறான மனிதன் ஆகப் போகின்றான் என்பதையே தாய் தான் தீர்மானிக்க வேண்டும்.

புரிதலும் தாயிடம் தான் அதிகமாக நடைபெறுகின்றது.

தன் மகன் அல்லது மகள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தாயால் புரிந்து கொள்ள முடியும். அதேபோல நமக்குப் பிடித்தவை பிடிக்காதவை உடம்பிற்குத் தீங்கு விளைவிப்பவை என அனைத்தையும் தாய் அறிவாள்.
நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்றே தாய் முதலில் நினைப்பாள்.
நாம் மழையில் சொட்டச் சொட்ட நனைந்து வீடு திரும்பும்பொழுது, வாசலிலேயே துண்டுடன் நின்று,

‘‘அப்பவே குடை எடுத்துட்டுப் போகச் சொன்னேன், கேட்டியா’‘ எனத் திட்டுவதும் தாய்தான்.

நமக்கு அடிபடும் பொழுது நம்மைவிட வலியால் அதிகம் துடிக்கும் ஒரே நபரும் நம் தாயாகத் தான் இருக்க முடியும்.

ஒரு மகனுக்கும் சரி ஒரு மகளுக்கும் சரி அவர்கள் தாய் மேல் வைத்திருக்கும் அன்பு வேறுபடுகிறது.

மகனோ சிறுவயதில் இருந்தே தாயை நேசிக்கின்றான். அவள் அருகிலேயே நாட்களைச் செலவழிக்கின்றான்.

‘‘சாப்பாடு வேணும், என் யூனிபார்மை துவச்சாச்சா, என் பொம்மையைத் தேடித்தா, கால்ல இடிச்சுகிட்டேன், இந்தாம்மா மார்க் சீட் சைன் போட்டு விடு’‘ என அனைத்தையுமே அவன் தாயிடம் தான் சொல்கிறான். கேட்கிறான்.
தந்தையிடம் அவன் கேட்டது ஒன்று தான் ‘‘அப்பா அம்மா எங்கே?’‘
இவ்வாறாகத் தாயின் செல்லப்பிள்ளையாகவே அவன் வளர்கிறான்.
ஆனால், மகளோ தன் சிறு வயதிலெல்லாம் தந்தை உடனே களிக்கிறாள். அவளுக்குத் தந்தைதான் அவளது சூப்பர் ஹீரோ. வெளியே கூட்டிக் கொண்டு போகச் சொல்வது, எதாவது வாங்கித் தர சொல்வது என எல்லாமே தந்தையிடம் தான்.

அவ்வயதில் அவள் தாயை கண்டு கொள்வதே இல்லை. ‘‘ஐஸ்கிரீம் வேண்டாம்’‘ என்றால் தாய் கெட்டவள்.

அடம் பிடிப்பதைப் பொறுக்காமல் அதை வாங்கித் தரும் தந்தையோ நல்லவர். ஆனால் யார் உண்மையிலேயே நன்மை செய்கிறார்கள் என அவருக்கு அப்பொழுது தெரிவதில்லை.

ஆனால் வளர்ந்த பிறகு அனைத்துமே மாறி விடுகின்றது.

அதுவும் மகள்களுக்குத் தாங்களும் தாய் ஆகும் நிலையில்தான் அவர்களின் அம்மாக்களின் மகிமை தெரிகின்றது.
அதன் பிறகு அக்கடவுளே நினைத்தாலும் அம் மகளையும் தாயையும் பிரிக்க இயலாது.

தன் மகளோ மகனோ செய்யும் ஒவ்வொன்றையும் பார்க்கும் பொழுதுதான், ‘‘நாமும் நம் அம்மாவை இப்படித்தானே திட்டி இருப்போம் கஷ்டப்படுத்தி இருப்போம். ஆனால் அவள் எங்கள் மீது ஒருபோதும் கோபம் கொண்டதில்லையே’‘ என உணர்கிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோர்கள் செய்தது சரி என உணரும் வேலையில், அவர்களைத் தவறாக நினைக்கும் பிள்ளைகள் அவர்களுக்கு வந்து விடுகின்றார்கள்.

அதேபோல, மகனோ தன் மனைவி வரும் வரை தான் தாயின் அருகில் இருக்கிறான். அதன்பிறகு அவன் தாயின் கருத்துக்கள் இரண்டாம் நிலைக்குச் சென்று விடுகின்றன. மனைவி தான் முதல் என அவன் மாறிப் போகின்றான்.

ஆதலால் தான் ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது.

மகன் தனக்குத் திருமணம் நடைபெறும் வரை தான் தாய்க்கு மகனாக இருக்கிறான்.

ஆனால், ஒரு மகளோ வாழ்நாள் முழுவதும் தாய்க்கு மகளாகவே இருக்கிறாள்.

வாழ்வில் எந்த ஒரு சூழலிலும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியதெல்லாம் ஒன்றுதான். அன்று நம் பெற்றோர்கள் இல்லையென்றால் இன்று நாம் இல்லை. அவர்கள் தான் நமக்கு உயிர் அளித்த தெய்வங்கள். அவர்களை நாம் என்றுமே மறக்கவோ உதாசினப் படுத்திவிடவோ கூடாது. ‘‘
அதிலும் தாய் ஆனவள் ஒருபடி மேல் தான். தன் உடலில் பாதி மட்டும் அளிக்காமல், அவளது உயிர் அன்பு வாழும் காலம் அனைத்தையும் நமக்காக அளிக்கும் அவளை நாம் தெய்வமாகவே எண்ண வேண்டும்.

என்றுமே தாய் ஆனவள் நம் உடலில் ஓர் அங்கம்தான். நமக்குள்ளும் ஒருவராகவே அவளை நினைக்க வேண்டும். தினமும் நினைக்க வேண்டும் என்றாலும், அன்னையர் தினம் அன்றாவது அவளிடம் நாம் இதைக் கூறுவோம்.

‘‘இவ்வுலகை பொறுத்தவரை நீ எனக்குத் தாய் ஆனால் என்னைப் பொறுத்தவரை நீ தான் என் உலகமே”